மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு
x
தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்படும் என்று, முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.இதையடுத்து இன்று, தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி, தொழில், வேளாண், கால்நடைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேம்பாட்டு குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை குழு கூடி, ஏற்றுமதியில் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தொழில்துறை செயலாளர் தலைமையிலான நிர்வாக துணைக்குழும் அமைக்கப்பட்டுள்ளது.2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு, அறிக்கைகளை அளிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்