தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் - போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தமிழகத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் - போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு
x
தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  திமுக சார்பில் வேட்பாளர்கள் கனிமொழி சோமு,  ராஜேஷ்குமார் மற்றும் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன்,  பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் திமுக சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தேர்வாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்