உள்ளாட்சி தேர்தல் - 97,831 வேட்பு மனுக்கள் தாக்கல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்பு மனுக்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
உள்ளாட்சி தேர்தல் - 97,831 வேட்பு மனுக்கள் தாக்கல்
x
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்பு மனுக்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி 9 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 97 ஆயிரத்து 831 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 ஆயிரத்து 71 வேட்பு மனுக்களும்,கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 ஆயிரத்து 967 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதே போல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 ஆயிரத்து 671 வேட்பு மனுக்களும்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 122 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன.இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்