3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.
3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை
x
குஜராத் துறைமுகத்தில்  கப்பல் வழியாக போதை பொருள் கடத்தபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 2 பெட்டகங்களில் முகபவுடர் என்ற பெயரில் கடத்திவரப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3000 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் அனுப்பப்பட்டு இருந்த நிறுவனத்தின் ஜி.எஸ்.டி பெயரை வைத்து விசாரித்த போது சென்னையை சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர் மற்றும் வைசாலி ஆகியோர் நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.தொடர்ந்து சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள வைசாலியின் தந்தையான கோவிந்தராஜூ தராகா வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் தம்பதியை ஆஜர்படுத்தி 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து போதை பொருட்கள் வந்துள்ளதால் தலிபானுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த  விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது. குறிப்பாக தம்பதிகள் தங்கி இருந்த சென்னை கொளப்பாக்கத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர்.குறிப்பாக இந்த தம்பதி இயக்கி வந்த ஆஷி டிரேடர்ஸ் நிறுவனம் சென்னை ஈக்காட்டு தாங்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அங்கும் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்