மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி - வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் முகாம்

தமிழகம் முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி  - வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் முகாம்
x
பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திடும் வகையில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் முகாம் மூலம், மழைநீர் வடிகால்களில் சேதாரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவது  உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.இந்த பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை 6 பிரிவுகளாகப் பிரித்து 6 நாட்களுக்குள் பணியினை முடிக்கும் வகையில் நகரப்பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.சென்னை மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121  நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில்  9 ஆயிரத்து 97 இயந்திரங்கள் உதவியுடன் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி நடைபெறுகிறது.  4 ஆயிரத்து 623 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 97 ஆயிரத்து 550 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்