வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்  6 மற்றும் 9  தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட போவதாகவும் , கொடி மற்றும் தன் படத்தை பயன்படுத்த நடிகர் விஜய் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உள்ளாட்சி தேர்தல் களத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்