"ஆட்டுக்கல் அம்மிக்கல் உற்பத்தி பாதிப்பு" - 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்காததால் ஆட்டுக்கல், அம்மிக்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளனர்.
x
ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள கோவிந்தம்பாளையம், பெரியபாளையம், வெள்ளியம்பாளையம்,  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு,  ஆட்டுகள், அம்மி உற்பத்தி, பிரதான தொழிலாகும். குடிசைத்தொழிலாக இதில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.குவாரியில் பாரையை வெட்டி எடுத்து, ஆட்டுகள், அம்மிகள்,  கிரைண்டர் கல் உற்பத்தி  செய்து, தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடக, ஆந்திரா,புதுசேரி மாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வந்தனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தில், கல்குவாரிகள் செயல்படாததால், புதியதாக கற்கள் வெட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழில் முடங்கியுள்ளதால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்