தூய்மை இந்தியா திட்ட துப்புரவு பணியாளர்கள் - தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமனம்

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் சார்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூய்மை இந்தியா திட்ட துப்புரவு பணியாளர்கள் - தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமனம்
x
சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு பகுதியில்  மோகன் என்பவர் கட்டி வரும் புதுவீட்டின் தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அந்த இடத்தை தேசிய தூய்மை பணியாளர்கள்  ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய  மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், உயிரிழந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட தொட்டியில் தேங்கி இருந்த தண்ணீரை பரிசோதிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறினார்.  தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் சார்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் , இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வெங்கடேசன் கேட்டு கொண்டார். 



Next Story

மேலும் செய்திகள்