கணவன்-மனைவி தகராறு வழக்கில் தற்கொலைக்கு தூண்டுதல் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம்

தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளைத்துரை என்பவரும், அவரது மனைவி திருமலைக்கனியும் கணவன் -மனைவி இடையிலான தகராறு காராணமாக 2007 ஆம் ஆண்டு விஷம் குடித்தனர்.
x
இதில் திருமலைக்கனி உயிரிழந்ததும், அவரது  சகோதரர் கொடுத்த புகாரில், சிகிச்சை பெற்று குணமான வெள்ளத்துரை கைது செய்யப்பட்டார். 


இந்த வழக்கு குறித்து விசாரித்த நெல்லை நீதிமன்றம், தற்கொலைக்கு தூண்டியதாக வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.


இதனையடுத்து வெள்ளத்துரையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  தற்கொலைக்கு தூண்டியதற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்ததுடன், நெல்லை நீதிமன்ற தீர்ப்பின் மற்ற தண்டனைகளை உறுதி செய்தது. 


இந்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 


ஒரு நபரை ஏதாவது செய்ய தூண்டும் செயலே தற்கொலைக்கு தூண்டுவதாகவும், 

ஆனால் வழக்கில் சம்பவ நாளில் மனுதாரர் மனைவியுடன் சண்டையிட்டதாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் கூறியது.

 
மனுதாரரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய
உச்சநீதிமன்றம்,  


சந்தர்ப்ப சூழல்களை வைத்து பார்க்கும்போது, தற்கொலைக்கு தூண்டியதாக எவ்வித ஆதாரமும் இல்லை என்றதுடன், 


தற்கொலைக்கு தூண்டியதாக நெல்லை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தண்டனை விதித்து தவறு இழைத்துள்ளன எனக் கூறி அந்த தீர்ப்புகளை ரத்து செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்