கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதற்கட்டமாக 3 கோவில்களில் தொடக்கம்
கோவில்களில் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நாள் முழுவதும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் இந்தத் திட்டத்தில், அரசு செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன? விரிவாக பார்க்கலாம்...
கோயில்களில் நாள் முழுவதும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனிருந்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் கோயிலில், அன்னதான திட்டத்தின் முதல் நாளில் தலை வாழை இலையில், ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வடை, பாயாசம்
உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
Next Story
