"நடிகர் விஜய் நுழைவு வரி பாக்கி செலுத்தி விட்டார்"

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நுழைவு வரி பாக்கி செலுத்தி விட்டார்
x
இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரிக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவர்  1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நடிகர் விஜய் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி செலுத்தப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பிலும், நடிகர் விஜய் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்