ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு - விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2021, 03:54 PM
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பியதால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடர்ந்த நிலையில்,  தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் 
ஏற்கனே 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

487 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

87 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

45 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

33 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

29 views

பிற செய்திகள்

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

14 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

11 views

அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

122 views

திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

4 views

தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

4 views

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.