மதுபானம் மொத்த விற்பனை-நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுபானம் மொத்த விற்பனை-நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம்காவல்  சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது,  டாஸ்மாக் மதுபான கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர் மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் மொத்தமாக விற்பனை செய்வதும் சட்டவிரோதம் என்பதால் ஏன் விற்பனையாளர் மீது வழக்கு பதிந்து  கைது செய்யவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதேபோல் நீதிமன்றத்திற்கு முறையான தகவல்களை தராத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்