தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையை ஈடுபடுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையை  ஈடுபடுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி
x
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில காவல்துறையை  ஈடுபடுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மாநில காவல்துறையினர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சிஆர்பிஎப் வீரர்களை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தலில் சமூகவிரோதிகளின் செயல்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்படும் வரை வாக்கு பெட்டிகள் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் வீரர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்