மாணவர்களை காவு வாங்கும் நீட் தேர்வு - உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?

தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்கு வந்த 4 ஆண்டுகளில் 13 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.
x
நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்து வந்தாலும் , தமிழகத்தை பொறுத்தவரை மிகப்பெரும் சர்ச்சையாகவே உள்ளது. நீட் தேர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மாணவர்கள் சிலர் இறுதியில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். அரியலூர் அனிதா தொடங்கி, கடந்த ஆண்டு வரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு இரண்டு நாட்களில்  சேலம் மாவட்டம்  கூளையூர்  கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை உலுக்கி உள்ளது.

இதனிடையே, மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கண்டறிந்து, அவர்களுக்கு முறையான கலந்தாய்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார் உளவியல் ஆலோசகர் கண்ணன் கிரீஷ்....


Next Story

மேலும் செய்திகள்