அக்.6,9-ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.
x
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ஆம்  தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமடைந்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொடர்புடைய மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்களில் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 10 ஆயிரம் ரூபாய்,  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஆதிதிராவிடர், பெண்களுக்கு பாதித்தொகை கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்டச்செயலாளர் அல்லது அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்