நீட் தேர்வால் மாணவி கனிமொழி உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது,அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மாணவி கனிமொழி உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது,அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி அனிதா தொடங்கி, கனிமொழி வரை, மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு, இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும், கைகளைப் பற்றிக் கொண்டு, கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.நீட்டை எதிர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர்,பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை, எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்,மாணவி  கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்