தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்

கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
x
கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றினார். அப்போது, ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்த இறுதி அறிக்கை தயாரிக்க ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு கோவாவுக்கு மாற்றப்பட்ட அவரை, தற்போது மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்