பொறியியல் படிப்பு - தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்பு - தரவரிசைப் பட்டியல் வெளியீடு
x
தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஏற்கனவே வெளியான நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியானது. http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் 87 ஆயிரத்து 291 பேர், மாணவிகள் 51 ஆயிரத்து 730 பேர்,  Card-6 மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். 440 கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்