63 வயதில் நீட் தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 12:19 PM
சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர், 63 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
நாவலூரில் வசித்து வரும் முனுசாமி என்பவர், 1987ஆம் ஆண்டு துணை ஆய்வாளராக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். கல்வி மீதான ஆர்வத்தால் காவல்துறை பணியை ராஜினாமா செய்து விட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த முனுசாமி, சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இதனிடையே, நேற்று முன் தினம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வுக்கு வயது வரம்பு இல்லை என்பதால், தேர்வில் பங்கேற்றதாகவும், தேர்ச்சி பெற்ற பின் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கும் எனவும், முனுசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.