கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இன்று விசாரிக்க உதகை நீதிமன்றம் முடிவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 4 வது குற்றவாளி கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜம்சீர் அலியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இன்று விசாரிக்க உதகை நீதிமன்றம் முடிவு
x
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக  உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 4 வது குற்றவாளி  கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த  ஜம்சீர் அலியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை  நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தின் போது  உயிர் இழந்த கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கயிற்றில் கட்டிய முக்கிய குற்றவாளி ஜம்சீர் அலி என்பது தெரிய வந்துள்ளது. பங்களாவின் ஜன்னல் கதவை உடைத்து நுழைந்த 4 நபர்களில் இவர் ஒருவர் என்பதால், பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட விபரங்கள் குறித்து 8 மணி நேரம்  ஜம்சீர் அலியிடம்  காவல்துறையினர் மிக தீவிர  விசாரணை நடத்தினார். விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே,  கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, வாளையார் மனோஜின் ஜாமினில் தளர்வுகள் கேட்டு அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையை  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி  சஞ்ஜய் பாபா இன்று விசாரிப்பதாக ஒத்தி வைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்