காவல்துறை - முக்கிய அறிவிப்புகள்

புதிதாக காவலர் ஆணையம் அமைக்கப்படும் என்பன உட்பட காவல்துறை சார்ந்து 60 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
காவல்துறை - முக்கிய அறிவிப்புகள்
x
காவல்துறை - முக்கிய அறிவிப்புகள் 

புதிதாக காவலர் ஆணையம் அமைக்கப்படும் என்பன உட்பட காவல்துறை சார்ந்து 60 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சைபர் குற்ற புலனாய்வு தொடர்பாக மாநில இணையதள குற்றப் புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் என அறிவித்தார்.சென்னை காவல்துறையில் மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு உருவாக்கப்படும்.சென்னை தெற்கு மற்றும் வடக்கு பிரிவுகளில் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.தவறான வழியில் சென்ற சிறார்கள் வாழ்வை மேம்படுத்த 51 சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.சென்னையில் நான்கு சைபர் குற்ற காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.1000 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணி நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்தார்,மீண்டும் காவல் ஆணையம் அமைக்கப்படும் எனவும்,காவல் உயர்அதிகாரிகளிடம் காணொளி மூலம் புகார் அளிக்கும் வசதி, கைபேசி செயலி உருவாக்கப்படும்.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குறைகளை களைய தனிப்பிரிவு உருவாக்கப்படும்.சுற்றுலா தலங்களை பாதுகாக்க சுற்றுலா காவல்துறை உருவாக்கப்படும்.நீட், மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.போலீசார் மாவட்டத்திற்குள் பேருந்தில் பயணம் செய்ய நவீன அடையாள அட்டை வழங்கப்படும்,2ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை வாரத்தில் ஒருநாள் ஓய்வு,இணைய குற்றங்களை புலன் விசாரணை செய்ய நிபுணர்கள் சேவை பயன்படுத்தப்படும்.அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம்,தீயணைப்புத்துறையினருக்கு 1,350 தற்காப்பு உடைகள், 10 சிறிய அவசர மீட்பு ஊர்திகள் வழங்கப்படும் என 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்