காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர்  பதிலுரை
x
சட்டபேரவையில் காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்  ஸ்டாலின், 

தேர்தல வாக்குறுதியின் அடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வேளாண் சட்டத் திருத்தம், சேலம் எட்டு வழி சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட ஐயாயிரத்து 570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மீது போடப்பட்ட 36 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், 

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  இடைக்கால அறிக்கை பெறப்பட்டு உள்ளதாகவும்,

முழு அறிக்கை பெறப்பட்டு பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ விசாரித்து வருவதாகவும்,

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான  ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர்,  

லஞ்ச ஒழிப்பு துறையிடம் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்