நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து
x
நீட் நுழைவுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் பி பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், மற்ற பகுதிகள் எளிமையாக இருந்ததாகவும் பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. 

அதன்படி, இயற்பியல் பாடத்தில் 50 க்கு 48 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 50க்கு 38 கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாகவும்,

தாவரவியல் பாடத்தில் 50க்கு 34 கேள்விகளும், விலங்கியல் பாடத்தில் 50 க்கு 45 கேள்விகளும் என ஒட்டு மொத்தமாக 200 க்கு, 165 கேள்விகள் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்