நீட் விலக்கு மசோதா: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை, சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.
x
நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கான இடங்கள், ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.  


இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார். 


இந்த குழுவானது கடந்த ஜூலை 17ஆம் தேதி பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, அரசுக்கு சமர்ப்பித்தது. 


பரிந்துரைகளை ஆய்வு செய்து, செயல்படுத்துவதற்காக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று குழு பரிந்துரைத்தது. 


இந்நிலையில், சட்டசபை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். 


இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பேரவையில் இன்றே நிறைவேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்