மதுவுக்கு அடிமையாகும் கணவர்கள்: குடும்பம் குடும்பமாய் அரங்கேறும் தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையாகும் ஆண்களினால் , குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன...
மதுவுக்கு அடிமையாகும் கணவர்கள்: குடும்பம் குடும்பமாய் அரங்கேறும் தற்கொலை
x
கொரோனா காலத்தில் மதுக்கடைகள் மூடியிருந்த‌தால், இது போன்ற செய்திகள் வராமல் இருந்தன... மதுக்கடைகள் திறக்கப்பட்டு இதோ சில நாட்களிலே அரங்கேற தொடங்கிவிட்டன அடுக்கடுக்கான துயர சம்பவங்கள்...


கடலூர் மாவட்டத்தில் அரங்கேறிய அந்த இரு துயர சம்பவங்கள் மொத்த மாவட்டத்தையும் சோகத்தில் ஆழ்த்தின... 

அதில் ஒன்று விருத்தாச்சலம் அருகே உள்ள ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாக்கியராஜின் குடும்பம்... 

கூலித்தொழில் மூலம் கிடைக்கும் பணத்தில் குடித்து விட்டு வரும் பாக்கியராஜ், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் அடிக்கடி மனைவி பாக்கியலெட்சுமியுடன் தகராறு வேறு... தினமும் அணுவணுவாய் செத்து பிழைத்த பாக்கியலெட்சுமி, ஒரேயடியாக சாகும் முடிவை எடுத்துள்ளார். 

ஆனால், குடிகார கணவர் பொறுப்பில் தன் 17 வயது மகளையும், பசியால் வாடும் நிலையில் தன் 16 வயது மகனையும் விட்டு செல்ல தயாராக இல்லை பாக்கியலெட்சுமி... 

இப்படியிருக்க, பாவம் போதைக்கு அடிமையான தன் தந்தையால், ஏற்கனவே உடைந்து போய் இருந்துள்ளனர் அந்த பதின்ம வயது குழந்தைகள்... இதனால், அவர்களும் தாயின் முடிவையே கையில் எடுக்க, தாயும் 2 பிள்ளைகளும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்