சுகேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைதான சம்பவம் - டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
பதிவு : செப்டம்பர் 12, 2021, 09:46 AM
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான அவரது கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபருக்கு ஜாமின் பெற்று தர தொழிலதிபரின் மனைவியிடம் லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் மீது  200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அதேநேரம் சுகேஷின் காதலி லீனா மரியா பால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு நெருக்கமான கூட்டாளிகள் நான்கு பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகளான கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து, சாமுவேல் மற்றும் மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் சென்னையில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர்கள் 4 பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். 

இதில் கமலேஷ் கோத்தாரி ஹவாலா இடைத்தரகராக செயல்பட்டு வந்தவர். தமது சட்டவிரோத ஹவாலா பரிமாற்றத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் சென்னையில் பங்களா வாங்குவதற்கு கமலேஷ் கோத்தாரி உதவி புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மோசடி பணத்தின் மூலம் பல்வேறு சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாங்கித் தரும் வேலை கமலேஷ் கோத்தாரிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறே பல்வேறு ஹவாலா பரிமாற்றங்களை செய்துள்ளார். அதற்கு உடந்தையாக கமலேஷ் கோத்தாரி இருந்ததும் தெரியவந்துள்ளது. இவரின் தொடர்புகள் மூலமாக சட்டவிரோதமாக பல்வேறு நாடுகளுக்கும் ஹவாலா பணம் மாற்றப்பட்டுள்ளது. 

மற்றொருவரான சாமுவேல், நடிகை லீனா மரியாவின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர். 

மோசடியில் கிடைத்த பணத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் லீனா மரியா பால் பல்வேறு சொகுசு கார்களை வாங்குவதற்கு உதவி புரிந்ததாக அருண் முத்து என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவரான மோகன்ராஜ், சுகேஷ் சந்திரசேகரின் நீண்டகால வழக்கறிஞர்.

2014 ஆம் ஆண்டு முதல் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞராக இருக்கும் மோகன்ராஜ், சுகேஷ் சந்திரசேகரிடம்  இருந்து பணத்தைப் பெற்று பின்னர் அது பல்வேறு வழிகளில் மூலம் நடிகை லீனா மரியாவுக்கு மாற்றியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

59 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

48 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

26 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி - "நாளை முதல் டிக்கெட் முன்பதிவு"

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6 views

பாமக தனித்து போட்டி; விமர்சனம் - விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

25 views

"கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிரை மாய்த்து கொள்ளாதீர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

66 views

ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.

34 views

"மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதி மாற்றம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலியாக மெகா தடுப்பூசி முகாம் தேதி வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

67 views

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையை ஈடுபடுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.