காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை - மத்திய அரசு ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
x
நாடு முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படகூடிய  42 நகரங்களில், 30 சதவீத மாசை குறைக்க NCAP என்ற  புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 5 ஆண்டுக்கான இந்த திட்டம்  தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்நிலையில் சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்க மொத்தம் 181 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி, ஐ.ஐ.டியுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.ஐ.டி இடையே கையெழுத்தானது. சென்னையில்  காற்றின் தரம், காற்று மாசு அடைவதற்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்