வீட்டிலேயே விநாயகர் சிலை கண்காட்சி - தங்கம், வைரம், நவரத்தின கற்களுடன் பல வகையான சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, பக்தர் ஒருவர் தனது வீட்டில் விதவிதமான பிள்ளையார் சிலைகளுடன் அருங்காட்சியகம் அமைத்துள்ளார்
x
நாம் காண்பது விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள் அல்ல... இவை அனைத்து தனி நபர் ஒருவர் ஆர்வமாக சேகரித்தவை. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை ராதாநகரில் வசித்து வரும் கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 14 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை சேகரித்து வரும் இவரின் வீட்டில், தங்கம், வைரம், நவரத்தின கற்களுடன் பல வகையான விநாயகர் சிலைகளை பார்க்க முடிகிறது. இவற்றை சேகரிப்பது மட்டுமின்றி... சேகரித்த விநாயகர் சிலைகளை வைத்து இரண்டு ஆண்டுகளாக கண்காட்சியும் நடத்தி வந்துள்ளார், சீனிவாசன்.

ஊரடங்கு காரணமாக பொது இடத்தில் கண்காட்சி நடத்த இயலாததால் தற்போது தனது வீட்டிலேயே விநாயகர் கண்காட்சியை தொடங்கி விட்டார், சீனிவாசன். மிகுந்த ஆத்ம திருப்தியுடன் இந்த பணிகளை செய்து வருவதாக கூறுகிறார், விநாயகர் பக்தர் சீனிவாசன். இந்த கண்காட்சியில் சுமார் ஐயாயிரம் விநாயகர் சிலைகள் மற்றும்  பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் பற்றிய வரலாற்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன...

தந்தி டிவி செய்திகளுக்காக தாம்பரத்தில் இருந்து செய்தியாளர் மீரான்.

Next Story

மேலும் செய்திகள்