விவசாய காப்பீட்டில், நிறுவனங்கள் மவுனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பயிர் காப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்கக்கோரும் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விவசாய காப்பீட்டில், நிறுவனங்கள் மவுனம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
x
பயிர் காப்பீட்டு தொகையை வட்டியுடன் வழங்கக்கோரும் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த சுந்தர விமலநாதன், பயிர் காப்பீடு தொகை வழங்குவது குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் மவுனமாக இருப்பதாக மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்​. அதில், 2020-21ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விவசாய காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை உரிய வட்டியுடன் வழங்கவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை தேசிய அளவிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிட கோரினார். நிவர், புரவி புயல்கள் மற்றும் மழையால், 345 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என அறிக்கையளித்ததை சுட்டிக்காட்டி உள்ளார். பிரதம மந்திரி திட்டத்தின் காப்பீட்டு மூலம் இழப்பீடு பெறும் பகுதிகளை மாநிலக் குழு அடையாளம் கண்டதாகவும், பயிர்காப்பீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவில் குறைதீர் அலுவலரை நியமிக்கவும், உத்தரவிட கோரினார். இதை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வு, மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28க்கு தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்