"மோசடி கும்பலிடம் சிக்க வேண்டாம்" - சென்னை காவல்துறை வேண்டுகோள்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 08:21 AM
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாப்பி, லசாடா, போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும்,  7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வருகிறது. இந்த மெசேஜ் லிங்கை அழுத்தினால் உடனடியாக honey மற்றும் making என்ற செயலி பதிவிறக்கம் ஆகிறது. பின்னர் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலமாக பொதுமக்களுக்கு மோசடி நபர்கள் அறிவுரை வழங்கி அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள். முதற்கட்டமாக போனஸ் தொகை 101 ரூபாயும் மோசடி நபர்கள் அனுப்பி, அந்த ஆப் மூலமாக குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுகிறார்கள். அதற்கான கமிசன் தொகையும் பயனாளருக்கு கிடைக்கும் என நம்ப வைக்கிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பலர் மோசடி நபர் அளித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி பொருளை வாங்கி விற்றுள்ளனர். ஆனால் கமிஷன் தொகையானது பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் ஆப்பில் மட்டுமே இருப்பதாக காட்டப்படும். மேலும் மோசடி நபர்கள் கொடுக்கும் டாஸ்கை முழுவதுமாக முடித்தால் மட்டுமே தங்களது வங்கி கணக்கிற்கு பணம் வரும் என நம்ப வைத்து பின்னர் செலுத்திய பணத்தை மோசடி செய்வதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த மோசடியில் பொதுமக்கள் பலர் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்க வேண்டாம் எனவும் உடனடியாக ஹனி மற்றும் மேக்கிங் என்ற செயலியை செல்போனில் இருந்து அழிக்குமாறு சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். குறுகிய காலகட்டத்தில் அதிக பணம் சம்பாதிக்களாம் என வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியோ விளம்பரத்தையோ நம்ப வேண்டாம் என சென்னை காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

799 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

97 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

49 views

பிற செய்திகள்

மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு அயனாவரம்-புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10 views

பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

15 views

பயங்கரவாத குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை - அமைச்சர் ரகுபதி

10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலையில் பயங்கரவாத குற்றவாளிகளை விடுவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

10 views

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சேதமடைந்த தரைப்பாலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

8 views

நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 views

அதிமுக பொன்விழா ஆண்டு; எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை -ஆடல், பாடலுடன் அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.