விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
x
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்  முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். காவல்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்,  விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். பல இடங்களில் விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றும் காட்சிகளைப் பார்ப்பது வருத்தமாக உள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை இன்றே முதல்வர் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு விளக்கமளித்து பேசிய முதல்வர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை எனவும் ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி தான் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  கொரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை எனவும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டும் தான் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் (gfx in 5 ) அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகள் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்