தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்
x
தமிழகத்தில் காலியாக உள்ள  2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.களாக இருந்த அ.தி.மு.க.வின் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், இந்த காலியிடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கும் எனவும், மனுதாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 22ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீது செப்டம்பர் 23 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும், மனு வாபஸ் பெற செப்டம்பர் 27 ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி பதவிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என்றும், 

அன்று மாலை 5 மணிக்கு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே, புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது .


Next Story

மேலும் செய்திகள்