"நெகிழிகள் இல்லாத சென்னை" சாத்தியமா..?

சென்னையில் உள்ள உணவகங்களில் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவிட, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
சென்னையில் உள்ள உணவகங்களில் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு உத்தரவிட, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்தது. 

தொடக்கத்தில் அரசு நிர்வாகத்தின் கெடுபிடிகளால் இந்தத் தடை பரவலாக கடைபிடிக்கப்பட்டாலும், தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், நெகிழிகள் இல்லா சென்னையை உருவாக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன் ஒருபகுதியாக, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, வணிகர்களுடன் சென்னை மாநகராட்சி சார்பில் தொடர் ஆலோசனை நடந்து வருகிறது. 

முதற்கட்டமாக, உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களுக்கு பதில் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்தி உணவு வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை சென்னை மாநகராட்சி பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பாக, உணவக உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.   

சுற்றுச்சூழலுக்கும், மனித உடலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் துணிப்பைகள் தயாரிப்பு, பாக்கு மட்டை விற்பனை உட்பட இதர தொழில்களும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்