"குளம் இருந்தால் ஊருக்கு கெடுதல்" - சாமியார் சொன்னதை நம்பி குளத்தை மூடிய தனி நபர்

திருவாரூர் அருகே குளம் இருந்தால் ஊருக்கு நல்லதல்ல என கூறிய சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு ஊரில் இருந்த குளத்தை தனி நபர் மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
திருவாரூர் அருகே குளம் இருந்தால் ஊருக்கு நல்லதல்ல என கூறிய சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு ஊரில் இருந்த குளத்தை தனி நபர் மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விலாசம் கிராமத்தில் பழமையான பத்தினி அம்மன் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்தின் பின்புறம் ஊருக்கு பொதுவான குளம் ஒன்று உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் வருவாய் பதிவேட்டில் கிராமத்துக்கு சொந்தமான பொது குளம் என்றே உள்ளதால் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கோயிலை நிர்வகித்து வரும் டிராவல்ஸ் அதிபர் ஒருவர் கோயிலை தன் சொந்த செலவில் புனரமைத்து வருகிறார். கும்பாபிஷேகமும் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகளை பார்வையிட வந்த சாமியார் ஒருவர், கோவிலின் பின்புறம் உள்ள குளத்தால் கிராமத்திற்கு நல்லதல்ல என்றும், உடனே குளத்தை மூடிவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி குளத்தை மூடும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என கூறி பேரளம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது பாதி குளம் மூடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்