அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கு - கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கனரா வங்கியில் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
x
அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கனரா வங்கியில் புதிதாக பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும் என்று  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஏற்கனவே அனைத்து மாணவர்களுக்கும் எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இந்த வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்பதை அறியாத பெற்றோர்கள்,  மாணவர்களின் கணக்கில் அரசு சார்பாக போடப்படும் பணத்தை எடுத்து விடுகின்றனர். இதனால், அபராதமாக 500 ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதால், அரசு வழங்கும் உதவித் தொகை அபராதமாக வங்கிக்கு சென்று விடுகிறது. இந்த நடைமுறை சிக்கலைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் புதிதாக கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும் என்று "சமக்ரா சிக்ஷா அபியான்" திட்ட இயக்குனர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.







Next Story

மேலும் செய்திகள்