திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:29 PM
காதல் திருமணம் செய்தவர்களை பெற்றோர்கள் மிரட்டுவதாகவும் உரிய பாதுகாப்பு தருமாறு காவல் நிலையத்தில் இளம் ஜோடி புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணை காதலித்துள்ளார். தினேஷ் குமாருக்கு வயது அதிகமாக உள்ளதை  காரணம் காட்டி இருவரின் காதலுக்கும் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடிகள் முகப்பேரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அண்ணாநகரில் உள்ள நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது பெண் வீட்டார் சார்பாக செல் போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே பாதுகாப்பு தருமாறு திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து  இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

19 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

19 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

12 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

9 views

பிற செய்திகள்

வளர்ப்பு பிராணிகளை வழங்க புதிய திட்டம்: கேரள அமைச்சர் தகவல்

கேரளாவில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள வளர்ப்பு பிராணிகளை அரசு அருங்காட்சியகத்தில் கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படுவதாக, அம்மாநில அமைச்சர் சிஞ்சுரணி தெரிவித்தார்.

1 views

ஆப்கானிஸ்தான் நிலவரம்: வல்லரசுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து இந்தியா வருகை

ஆப்கானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், வல்லரசு நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரிசையாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். இது குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

0 views

பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

டெல்லியில் பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

5 views

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.

50 views

கனிமம், மணல் கடத்தலை தடுப்பது குறித்த வழக்கு "நெல்லை, குமரி ஆட்சியர் பதில் கூற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு சோதனை சாவடி அமைக்க கோரிய வழக்கில், நெல்லை,குமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

"போதை ஊசியை தடுக்க நடவடிக்கை" - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூரில் இளம் வயது மாணவர்களிடையே போதை ஊசி பழக்கம் அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.