அறநிலையத்துறை தற்காலிக பணியாளர்கள்: பணி வரன்முறை செய்ய முடிவு
அறநிலையத் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் விவரங்களை அனுப்பிவைக்குமாறு, சார்புநிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதனிடையே, திருக்கோயில்களில் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2021 ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலத்திற்குள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் விவரங்களை செப்டம்பர் 15க்குள் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு சார்புநிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story