நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
x
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த உலகில் தன்னை விட தன்னிடம் கற்றவர் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் இனம் மட்டுமே என்றார். அரசுப்பள்ளிகளில் படிப்பை தாண்டி, விளையாட்டு கலை இலக்கிய போட்டிகள் மொழித்திறன் பயிற்சி, வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும் போது, மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய அரசு ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளதாகவும் அதில் ஆசிரியர் சமூகம் வழி நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்