"மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகள்" - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 06:07 PM
யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமை பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாக எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,  அதனை  8 வாரத்திற்குள் பரீசிலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

15 views

ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

26 views

போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

குழந்தையை அடித்து துன்புறுத்தும் நபர் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

குழந்தையை கையாலும் கயிறாலும் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.