விநாயகர் சதுர்த்தி : "அரசு உத்தரவில் தலையிட முடியாது" - உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி : அரசு உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்
x
விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த  இல. கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதர உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்