"பேச வாய்ப்பு வழங்கவில்லை - வெளிநடப்பு" - எதிர்கட்சி தலைவர் பழனிசாமி புகார்

சட்டபேரவையில் கருத்துக்களை முன்வைக்க அதிமுகவிற்கு வாய்ப்பு வழங்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சட்டபேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேரம் இல்லாத நேரத்தில் பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.

அப்போது  எதிர்க்கட்சி தலைவருக்கு, அவைமுன்னவர் துரைமுருகனுக்கும் இடையே  விவாதம் எழுந்தது. 
ஆனால் அவை அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசு முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்