12 வயது மகனுக்கு சூடு வைத்த தாய் - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கொடுமை
பதிவு : செப்டம்பர் 08, 2021, 12:33 PM
கடலூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு 12 வயதான மகனுக்கு தாயே கொடூரமாக சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி தேவி.  இவர், தனது 12 வயது மகனை அடிக்கடி சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிறுவனின் உடலெங்கும் தீக்காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சாந்தி தேவியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த  போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சாந்தி தேவி, அதே பகுதியை சேர்ந்த சுனைது முகமது என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒன்றாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது சாந்தி தேவி, தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு தன் மகனை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

மகனின் உடலில் சூடு வைத்து அதை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரசித்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். உடனடியாக போலீசார் சுனைது முகமதுவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளும் சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஓராண்டுக்கும் மேலாக தாய் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இதற்கு அவரின் கள்ளக்காதலனும் உடந்தை என சிறுவன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாந்தி தேவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சுனைது முகமதுவை கைது செய்தனர்.  உடலில் தீக்காயங்களுடன் இருந்த சிறுவனை கடலூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்ற பெண், தன் குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் துளசி மற்றும் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். இதற்கு அடுத்த சம்பவமாக குடியாத்தத்திலும் 2 சிறுவர்கள் வளர்ப்பு தாயால் கொடுமைக்கு ஆளாகினர். சிறுவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இப்போது கடலூரிலும் அதே பாணியிலான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

859 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

172 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

9 views

பிற செய்திகள்

ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 views

அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

5 views

முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

44 views

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்

கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

14 views

பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.