முதல்வருக்கு பாராட்டு - விளம்பரத்து அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் படம் அச்சிட விரும்பாத முதலமைச்சரை பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்கு, அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது.
முதல்வருக்கு பாராட்டு - விளம்பரத்து அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
x
பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் படம் அச்சிட விரும்பாத முதலமைச்சரை பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்கு, அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது. 

நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் அச்சிட்ட புத்தகம் மற்றும் பைகளை கைவிட, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜெயலலிதா, பழனிசாமி படங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, மாணவர்களுக்கு வழங்கக் கோரிய அவர், விநியோகம் செய்யாமல் இருப்பது மக்கள் பணத்தை வீணடிப்பதாகும் என்றார். அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்குமாறும் மனுவில் கோரப்பட்டது. 

இதை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுது பொருட்கள் வீணடிக்கப்படாது என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதையும், படம் அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் தமிழக அரசு தரப்பு கூறியது.  இதை பதிவு செய்த நீதிபதிகள், முதல்வரின் அறிவிப்பை பாராட்டியதுடன், விளம்பரத்துக்கு, அரசு நிதி பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்யவும், எதிர்காலத்தில், அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்