கொடநாடு எஸ்டேட் மேல் பறந்த ட்ரோன் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொடநாடு எஸ்டேட்டில் உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
x
கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களாக ட்ரோன்கள் பறந்த விவகாரம் - உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்

கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களாக டோன்கள் பறந்ததாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் கள ஆய்வாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார்

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வாய்மொழியாக அறிவிப்பு விட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பது

 கொடநாடு எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக ட்ரோன்கள் பறந்ததாக புகார்கள் வருகின்றன


எனவே கொடநாடு எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவே யாரும் அந்த பகுதியில் உரிய அனுமதி இன்றி ட்ரோன்கள் பயன்படுத்த கூடாது என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்