நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
x
நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்  தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளளனர். தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முறையீடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதன் மூலம் திட்டமிட்டபடி வரும் 12ஆம் தேதி தேர்வு நடை பெறுவது உறுதியானது. இதற்கிடையே தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை,  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நீட் தேர்வில்,  ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்