உள்ளாட்சி தேர்தல் - இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீட்டு தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்களுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி, ராணிபேட்டை பொது பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
Next Story
