கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா - தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பதிவு : செப்டம்பர் 07, 2021, 02:04 AM
கேரளாவில் நிஃபா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து தமிழகத்தின் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பீதிக்கு இடையே மீண்டும் கேரளாவை அச்சுறுத்த தொடங்கிவிட்டது நிஃபா வைரஸ்.கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிஃபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன..சிறுவன் ஆடு மேய்க்க சென்ற போது, காட்டுப்பகுதியில் உள்ள பழங்களை சாப்பிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இதையடுத்து சிறுவன் வசித்த பகுதியில் ஆய்வு செய்த நிபுணர்குழு, வவ்வால் கடித்த ரம்புட்டான் பழங்களை சேகரித்து ஆராய்ச்சிக்கு எடுத்து சென்றது..நிபா வைரஸ் பரிசோதனைக்காக கோழிக்கோட்டில் தனி ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இப்படி கேரளா அரசு நிபாவை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட, தமிழகத்திலும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுகாதாரத்துறை.காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை நிபா வைரஸ்க்கு முக்கிய அறிகுறிகள் எனவும்,யாருக்கெனும் அறிகுறி இருந்தால், அவரையும், தொடர்பில் இருந்தவர்களையும் 21 நாட்கள் தனிமைப்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி,  நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடுமையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரையும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்துக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.இதையடுத்து கேரளா தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் தொடர்ந்து 24 மணி நேரமும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து, கண்காணிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.ஏற்கனவே கொரோனா தடுப்புக்காக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்ட எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நிபா எதிரொலியால் உஷார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

859 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

172 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

53 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

42 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

9 views

பிற செய்திகள்

ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7 views

அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

5 views

முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

45 views

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்

கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

14 views

பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.