கைத்தறி, துணிநூல் துறை அறிவிப்புகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி, நகர்ப்புற நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்
கைத்தறி, துணிநூல் துறை அறிவிப்புகள்
x
தமிழக சட்ட பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகளை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார். தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில்  5 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இல்லந்தோறும் கோ-ஆப்டெக்ஸ் என்ற இலக்கினை அடைய  50 லட்சம் ரூபாய் செலவில் புதிய வடிவமைப்புகளில் ரகங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் ரசனைக்கேற்ற சேலை வடிவமைப்புகளை தாங்களே வடிவமைத்து கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஆயிரத்து 33 நிரந்தர பணியாளர்களின் ஊதிய விகிதத்தை சீரமைக்க ஊதிய நிர்ணயக் குழு அமைத்து சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறினார். தூய ஜரிகை பட்டுச் சேலைகளில் உள்ள ஜரிகையின் தரம் உறுதிப்படுத்துவதற்காக ஜரிகை உத்திரவாத அட்டை முதன்முறையாக கோ-ஆப்டெக்ஸில் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்