சட்டசபையில் திமுக- அதிமுக காரசார விவாதம்

தமிழக சட்ட பேரவையில் அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் சட்ட மன்றத்தில் சிறிது நேரம் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது.
சட்டசபையில் திமுக- அதிமுக காரசார விவாதம்
x
தமிழக சட்ட பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலுரை வழங்கிய அமைச்சர் காந்தி, கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் எந்த ஊருக்கும் ஆய்வுக்கு செல்லவில்லை என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர் அப்போது பேசிய அதிமுக கொறடா வேலுமணி,  ஆரோக்கியமானதாக அவை நடக்க வேண்டும் என நினைப்பதாகவும் ஆனால் அமைச்சர் அதிகாரிகளைபற்றி பேசும்போது ஒருமையில் பேசுவதாக, குறிப்பிட்டார். அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன்,  தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபோது ஆண்ட கட்சியில் நடந்தவை குறித்து விமர்சனம் செய்வது இயல்பு தான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, கைத்தறி நெசவாளர் சங்கத்தில் கடந்த ஆட்சியில் அதிமுக உறுப்பினர்களே இருந்ததாகவும், இந்த ஆட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சி என்று  பார்க்காமல் நெசவாளர்களை சமமாக பார்ப்பதாக கூறினார். அப்போது கட்சியின் பெயரை தெரிவித்ததாக கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர், திமுக உறுப்பினர்கள் அவையில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்றும்,  அவை குறிப்பை பார்த்தபின், அதன் மீது பதில் அளிக்கப்படும், என தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

Next Story

மேலும் செய்திகள்